
பசறை புனித யூதாததேயு தேவாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு
-பதுளை நிருபர்-
மனுக்குலம் மீட்கவந்த மாபரன் ஜேசுவின், பிறப்பின் சிறப்பை அறிவிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பசறை பங்கு புனித யூதாததேயு திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வானது பசறை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியான லுனுங்கல பங்கின் உதவி பங்குத்தந்தை (புனித லூர்து அன்னை ஆலயம்) அருட்பணி ஸ்டீபன்(OCD) , பசறை பங்கின் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுப்பாலன்(OMI) உள்ளிட்ட அருட்சகோதர சகோதரிகளும், பசறை ஜும்மா பள்ளிவாசல் இமாம் நிஹாப், பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் வைத்தியர் கிரிஷான் , பசறை வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி. ஜனாபா சரினா பேகம், பசறை தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர் பிரபாகரன் மேலும் மீறியபெத்த கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் சமரசிங்க பண்டா ஆகியரோடு பசறை பங்கின், பங்கு சமூகமும் இணைந்து விழாவை சிறப்பித்தனர்.
இதன்போது பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்ததோடு, விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்