2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 17ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளன.

இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தத் தொடரில் மொத்தமாக 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்