2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற போது சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கொழும்பு 11, மல்வத்தை வீதியில் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் கிடைத்ததும், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS ரங்கல்ல மற்றும் பொலிசார் இணைந்து மல்வத்தை வீதியில் புதன்கிழமை விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடற்படை தகவ்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையின் போது,  சந்தேகத்திற்கிடமான வகையில், 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்