2 வயது மகளுடன் காணாமல் போயுள்ள தந்தை!
நீர்கொழும்பில் தந்தை ஒருவர் தமது பெண் குழந்தையுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் குறித்த இருவரும் காணாமல் போயுள்ளதாகக் காணாமல் போனவரின் மனைவி நீர்கொழும்பு பொலிஸில் முறையிட்டுள்ளார்.
41 வயதான தந்தையும் 2 வயதும் ஒன்பது மாதங்களுமான அவரது குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் நீர்கொழும்பு – புனித ஜுட் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தமது மகளுடன் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியேறியதன் பின்னர் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்