
2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்துவின் உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாணந்துறை திக்துடுவ பகுதியைச் சேர்ந்த கவிந்து கிருஷாந்த சொய்சா (வயது 31) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து, ஒரு கிலோ 400 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேகநபர், தற்போது டுபாயில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான நிலங்கவுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
