2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளது.

பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.