19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண T20 தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் அணி ஏ பிரிவில் உள்ளது.

இந்தநிலையில் இன்றைய முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM