விமானம் விபத்து: இருவர் பலி
அமெரிக்காவின் – அலாஸ்கா மாகாணத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயணத்தை ஆரம்பித்து சுமார் 11 கிலோ மீற்றர் தூரம் வரை மாத்திரம் சென்ற நிலையில், விமானம் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, விமானம் தீப்பற்றி எரிந்ததாகவும், விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்