
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம்
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் , நீதிமன்றில் அது குறித்து இன்று புதன்கிழமை தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.
இதன்படி, கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 39 மனித எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேற்காக உள்ள வீதிக்குள் மனித எச்சங்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
