அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடல் பகுதிகளில் செயற்படும் மீன்பிடி மற்றும் கடற் சமூகத்திற்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்