15 வயது மாணவியை வன்புணர்ந்த 32 வயது காதலன்

குருணாகல் மாவட்டத்தில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பேருந்து சாரதியும் பேருந்தின் உரிமையாளருமான இரு பிள்ளைகளின் தந்தை இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 15 வயது பாடசாலை மாணவியும் சந்தேகநபரும் பேருந்து சேவையின் போது அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்