டுபாயில் இருந்து 60 தங்க பாலங்களை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, கைது செய்யப்பட்டுள்ளார்.
தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றில் ஊழியரான குறித்த சந்தேக நபர், தலா 10 தங்க பாலங்கள் அடங்கிய 6 பொதிகளை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொன்றும் தலா 116.62 கிராம் எடையுள்ள 24 கரட் தங்க பாலங்கள் அனைத்தும் 15 கோடியே எழுபது இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.