141 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

141 இந்திய கடற்றொழிலாளர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைய, இந்த ஆண்டு 351 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, 96 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறைத்தண்டனை பெற்று வருவதாகவும் இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.