14,000 கால்நடை பண்ணைகள் மூடப்பட்டுள்ளது

இலங்கையில் சிறிய அளவிலான 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் கால்நடைகள் திருடப்படுவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு கூறியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் இம்புலா தண்டா மற்றும் தெலஹெரா ஆடு வளர்ப்பு நிலையங்களில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்