13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் அறிமுகப்படுத்த உள்ளது.

அமெரிக்கா முழுவதும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய வயது வரம்பை அறிவிக்கும் புதிய இரு கட்சி தீர்மானத்தின் மூலம் தடை விதிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு பதின்வயதினர் கணக்குகளை உருவாக்கும் முன், பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.