13 வயது சிறுவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் நால்வர் கைது

13 வயது சிறுவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பதில் நீதவான் வாசனா எல்லாவல உத்தரவிட்டுள்ளார்.

பியகம பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி அன்று 13 வயதுடைய சிறுவன் ஒருவனை பியகம பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.