மட்டக்களப்பு மாணவன் பாக்குநீரிணையை நீந்தி கடந்து சாதனை

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய இலங்கை கடற்பரப்பை நீந்தி கடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தெய்வேந்திரன் மதுசிகன் (வயது – 20 ) என்பவரே இவ்வாறு புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்

இவர் இந்தியாவின் தனுஷ்கோடி நகரிலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு ஆரம்பித்து இன்று பி.ப 3 மணிக்கு இலங்கையின் தலை மன்னரை நீந்தி வந்தடைந்துள்ளார்.

இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கைத் தலைமன்னார் வரையிலான 32 கிலோமீட்டர் நீளமான பாக்கு நீரிணையினை பலத்த காற்றுடன் கூடிய இராட்சத அலைகளுக்கு மத்தியில் சுமார் 12 மணித்தியாலங்களுக்கு மேல் போராடி நீந்திக் கடந்து தனது சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

இவரின் சாதனைப் பயணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலரும் நேரில் சென்று தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டனர்.

இலங்கை இந்திய கடற்பரப்பை நீந்தி கடந்த மட்டக்களப்பு மாணவன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்