வயதில் மூத்த ஆணுடன் தவறான உறவு: தண்டித்த ஆசிரியர்களை பழிவாங்க தீ வைத்த சிறுமி

தென் அமெரிக்க நாடாகிய கயானாவில், தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் 14 வயது சிறுமி தவறான உறவில் இருந்ததை அறிந்த அவளுடைய ஆசிரியர்கள், அவளை கண்டித்தமையினால் சிறுமி ஹாஸ்டலுக்குத் தீவைத்துள்ளாள்.

குறித்த சிறுமியின் தவறான உறவை அறிந்த ஆசிரியர்களும், ஹாஸ்டல் வார்டனும் அவளைத் தண்டிக்கும் வகையில்,  அவளுடைய மொபைல் போனைப் பறித்துள்ளார்கள். கோபமடைந்த அந்த சிறுமி, இரவு நேரத்தில் தான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்குத் தீவைத்துள்ளாள்.

அந்த நேரத்தில் ஹாஸ்டல் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், மாணவ மாணவியரால் தப்பி ஓடிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது ஹாஸ்டலுக்குள் சிக்கி அவர்களில், அந்தப் பெண்ணைத் தண்டித்த ஹாஸ்டல் வார்டனான பெண்ணின் 5 வயது மகன் உட்பட 19 மாணவ மாணவியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவைத்த மாணவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

அந்த சிறுமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவள் குணமடைந்ததும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட இருப்பதுடன் அவளுடன் தொடர்பு வைத்திருந்த ஆண் மீதும், அவளை வன்புணர்ந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

அவள் அவருடன் விரும்பியே உறவு வைத்துக்கொண்டாலும், அவள் 16 வயதுக்குக் குறைவான வயதுடைய சிறுமி என்பதால், அந்த ஆண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்