1,000 விவசாய குடும்பங்களுக்கு யூரியா பகிர்ந்தளிப்பு
ஏழு மாவட்டங்களில் உள்ள 71இ000 விவசாய குடும்பங்களுக்கு 50 கிலோ வீதம் யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சகம் விநியோகிக்க தீர்மானித்துள்ளது.
விவசாய உபகரணங்கள் மற்றும் யூரியா உரம் அமைச்சிடம் கையளிக்கும் ஹம்பாந்தோட்டை பட்டா அத்தா விவசாய பூங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ நிகழ்வின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அம்பாறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ½ ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் இந்த இலவச யூரியா உரப் பைகளுக்கள் வழங்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் நாளை சனிக்கிழமை விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாராசூட் நெல் சாகுபடி முறையை ஊக்குவிக்க நெல் விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்குவதற்கு தேவையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்