கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர்.

ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மிசோரத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள், மற்றய மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக, அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர, மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்