10 வயது சிறுமி கொலை: வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் குறித்த சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுமியின் உடல் தற்போது அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.