10 நாளில் உடல் எடை குறைய
💢💢💢நமக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு உடல் பருமன்தான் காரணமாக இருக்கிறது. உடல் எடையை சரியாக பராமரித்தாலே பல நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால்இ இந்த 10 உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த உணவுகள் நமது வயிறை நிரப்புவதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
- நெல்லிக்காய், திராட்சை, செர்ரி என பெர்ரி பழங்களில் பல வகைகள் உள்ளது. இதில் நார்ச்சத்தும் ஆண்டி ஆக்ஸிடெண்டும் அதிகளவில் உள்ளது. இவை இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருப்பதோடு குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது
- உடலை வலுவூட்டுவது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் முட்டை உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான புரதங்கள், ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் முட்டையில் கிடைக்கின்றன. இதை சாப்பிடுவதால் நமது வயிறு சீக்கிரமாக நிரம்புவதோடு குறைவான கலோரியையே கொண்டுள்ளது.
- தினமும் வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து சூப் செய்து குடியுங்கள். இதன் மூலம் காய்கறிகளில் உள்ள சத்துகள் அனைத்தும் கிடைப்பதோடு உடல் எடையும் குறையும்.
- யோகார்டில் நமது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதம் அதிகளவு இருக்கிறது. மேலும் இதில் கொழுப்பும் கலோரிகளும் குறைவாகவே உள்ளது. உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் இதை தங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
- நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த ஓட்ஸ், குறைவான கலோரி கொண்டிருப்பதோடு குறைவாக சாப்பிட்டாலே உங்கள் வயிறை முழுமையாக்கிவிடும்.கால்சியமும் புரதமும் சீஸில் அதிகளவு இருக்கிறது. இதில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.: ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரதம் மீனில் அதிகமாக உள்ளது. மேலும் மீனில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாகவே இருப்பதால், உடல் எடை குறைப்பதற்கு இது மிகச்சிறந்த உணவாகும்.
- சியா விதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இதில் தாவரம் சார்ந்த புரங்களும் நிறையவே இருக்கின்றன. ஆகையால் உங்கள் உடல் எடையை குறைக்க இது சரியான உணவாக இருக்கிறது.
- கல்சியமும் புரதமும் சீஸில் அதிகளவு இருக்கிறது. இதில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
- இந்தப் பட்டியலில் பாப்கார்ன் இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக தெரியலாம். இது சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் என்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பாப்கார்னில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
- கொழுப்பற்ற இறைச்சியில் புரதமும் இரும்புச் சத்தும் அதிகமாக இருக்கின்றன. இதில் மற்ற இறைச்சிகள் போல் கொழுப்புகள் இல்லாததால் தாராளமாக உங்கள் எடையை குறைக்க இதை சாப்பிடலாம்.
10 நாளில் உடல் எடை குறைய
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்