07 விக்கெட்டுக்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று திங்கட்கிழமை போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்