
ஹோமாகம பகுதியை அண்மித்துள்ள மக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
ஹோமாகம – கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான புகை பரவியுள்ளது.
முன்னதாக இரண்டு தடவைகள் தீப்பரவலுக்கு உள்ளான குறித்த தொழிற்சாலையில் இருந்தே இவ்வாறு புகை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இந்தநிலையில், தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் தாங்கி ஊர்தி ஒன்றும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், புகையை கட்டுப்படுத்த மணல் பாரவூர்திகள் வரவழைக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
