ஹொங்கொங் சூறாவளியில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் கைது!

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சூறாவளியின் போது, சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில், இலங்கை பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவை நோக்கி நகர்ந்த ராகசா புயல் கடந்த செவ்வாய்க்கிழமை ஹொங்கொங்கை தாக்கியது

இதனால் குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடற்கரையோரம் இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் நின்று புயலில் செல்ஃபி எடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத்தொடர்ந்து சிறுவன் ஒருவரை ஆபத்தில் நிறுத்திய குற்றச்சாட்டில் சிறுவனின் தாயான இந்தியப்பெண்ணும் சிறுவனின் தாயின் நண்பி என தெரிவிக்கப்படும் இலங்கை பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.