ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மதுவரி உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட ஐவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் அலவத்துகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் கொழும்பு கலால் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் கலால் அதிகாரி எனத் தெரியவந்துள்ளதுடன் இவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்