
ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி-பளையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் திடீர் சோதனையிட்ட போது, ஒருவர் உடமையில் 35மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும், மற்றவரிடமிருந்து 29மில்லி கிராம் போதைப்பொருளுமாக மொத்தம் 64மில்லி கிராம் ஹெரோயினுடன் பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைதானவர்கள், யாழ்மாவட்டம், பளை அரசர் கேணி மற்றும் வண்ணாங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
