ஹெரோயினுடன் ஒருவர் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தலைமையாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் உடன் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை தலைமையாக பொலிஸார் தெரிவித்தனர் .

36 வயதுடைய நபரே இவ்வாறு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 3 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் 84 பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதை பொருள் வியாபாரி எனவும் அவர் மீது நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்த போதைப்பொருளையும் வியாபாரியையும் அவரிடமிருந்து கைப்பற்று பெற்ற குறித்த போதைப் பொருளையும் இன்று புதன் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்