ஸ்பெய்ன் பிரஜை விபத்தில் உயிரிழப்பு
காலி அஹங்கம அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஸ்பெய்ன் பிரஜை ஒருவர் கொங்கிறீட் கம்பம் ஒன்றில் மோதி அபராதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குறித்த வெளிநாட்டவர் ஒன்றரை மாதங்களாக அஹங்கம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கி இருந்துள்ளார் அத்தோடு இவர் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமையே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்