ஸ்பெயினின் தேசிய புலனாய்வு மையம் (CNI), செவுடா எல்லையில் பெருமளவிலான குடியேற்ற நுழைவு இடம்பெறக்கூடும் என சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பே எச்சரித்திருந்தது தற்போது வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜூலை 29ஆம் தேதி, சமூக ஊடகங்களில் செவுடா எல்லையை ஒருங்கிணைந்து கடக்க அழைப்புகள் பரவி வருவதாக CNI, ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியது. இந்த அழைப்புகள் 180,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களிலும் பரவியிருந்தன.
ஆனால், ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ஏற்பட்ட நுழைவு முயற்சியின் அளவை அதிகாரிகள் முன்கூட்டியே கணிக்கவில்லை. இரண்டு நாட்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் செவுடாவுக்குள் நுழைய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஸ்பெயின் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மொராக்கோவுடனான எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.











