பொகவந்தலாவ காவல் பிரிவுக்குட்பட்ட தெரேசியா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை பொகவந்தலாவ காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவ காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படைல் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.










