
ஸ்டுடியோவில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இருவர் கைது
கண்டி அலவத்துகொடவில் 43 போலி 5000 நாணய தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளரான சந்தேக நபர் ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக ஸ்டுடியோவில் உள்ள கணினி மற்றும் பிரிண்டரைப் பயன்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) மேற்கொண்டுள்ளது.
