வைரமுத்து கவிதை
💥புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும்இ பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
🎈பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்.
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்.
வலியெடுத்தால்
வழி பிறக்கும்.
வழி பிறந்தும்
வலியிருக்கும்.
🎈புகழின் பின்னால்
நீ போனால்
அது பொய்மான்
உன் பின்னால்
புகழ் வந்தால்
அது நிஜமான்
அப்போது தான்
நீ அதற்கு எஜமான்.
🎈விடியல்
மலச்சிக்கலின்றி தொடங்கி
இரவு மனச்சிக்கலின்றி
முடிந்தால் நீங்கள்
ஆரோக்கியமாய்
வாழ்கிறீர்களென்று
பொருள்.
🎈விடியாத இரவென்று
எதுவுமில்லை.
முடியாத துயரென்று
எதுவுமில்லை.
வடியாத வெள்ளமென்று
எதுவுமில்லை.
வாழாத வாழ்க்கையென்று
எதுவுமில்லை.
🔷பார் அழகு
பார்க்கும் விழி அழகு
பார்ப்பதெல்லாம் அழகு
🔷இருள் அழகு – அதிலே
ஒரு துளி ஒளியழகு
🔷மலை அழகு – ஆங்கே
பொழியும் மழையழகு
🔷சிலை அழகு – சிற்பியின்
கலை அழகு
🔷ஆண் அழகு – அவன்கொண்ட
ஆண்மை அழகு
🔷பெண்மை அழகு – அவள்ஈனும்
தாய்மை அழகு
🔷மொழி அழகு – செந்தமிழாயின்
அதுவன்றோ அழகு
🔷உண்மை அழகு – பொதுநல
பொய்யும் அழகு
🔷பிறப்பு அழகு – பிறர்கெனின்
இறப்பும் அழகு
🔷திருமணம் அழகு – மனமிரண்டும்
ஒன்றாயின் இல்லறம் அழகு
🔷துன்பம்நீக்கும் துறவறம் அழகு
மானம்காக்கும் மறம் அழகு
மகுடம்கொண்ட சிரம் அழகு
வாரிவழங்கும் கரம் அழகு
🔷மனம் அழகு – எனின்இ
யாவும் பேரழகு.
◼சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
❗ஏறும் இறங்காது
ஒருவழிப் பாதை
விலைவாசி.
💦ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.
⚪உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது.
💖பல திருமணங்களும் முறிந்து போவது கருத்து
வேறுபாடுகளால் அல்ல. அந்த
வேறுபாடுகளை எதிர்கொள்ளத்
தெரியாததால்தான்.
வைரமுத்து கவிதை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்