
வைத்தியர் மீது தாக்குதல்: மூவர் கைது
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மற்றும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியின் கனிஸ்ட சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு குறித்த 3 பேரினால் விசேட வைத்திய நிபுணர் தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
