வைத்தியருக்கு ஆதரவாக மக்களின் பேரெழுச்சி : முடங்கியது ஏ-9 வீதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், கடையடைப்பும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.

இதில் பொதுமக்கள் தமது எதிர்ப்பு கோஷசமிட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வருகை தராத நிலையில் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ-9 வீதியை முடக்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து முற்றாக முடங்கியது.

செய்வதறியாது திணறிய பொலிஸார், பின்னர் பொலிஸார் போராட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் வீதி முடக்கம் கைவிடப்பட்டதுடன், தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யாமல் விட்டனர்.

இன்று வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக 30 அமைப்புகள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பின்வரும் அமைப்புக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் கழகம்.
2.கொடிகாமம் வர்த்தக சங்கம்.
3.தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தென்மராட்சி.
4.முச்சக்கரவண்டிச் சங்கம் சாவகச்சேரி.
5.முச்சக்கர வண்டிச் சங்கம் கொடிகாமம்.
6.முச்சக்கர வண்டிச் சங்கம் கைதடி.
7.தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி.
8.கடற்றொழில் சங்கம் கச்சாய்.
9.லிகோரியார் கடற்றொழில் சங்கம் சாவகச்சேரி
10.சிகையலங்கரிப்பாளர் சங்கம் தென்மராட்சி.
11.சலவைத் தொழிலாளர் சமாசம் தென்மராட்சி.
12.சனசமூக நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி.
13.கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் தென்மராட்சி.
14.மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம்.
15.பனை,தென்னை கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் சமாசம்.
16.கமக்காரர் அமைப்புக்களின் ஒன்றியம் தென்மராட்சி.
17.சிறுதொழில் முயற்சியாளர் ஒன்றியம் தென்மராட்சி.
18.குடிசைக் கைத்தொழில் மேம்பாட்டு இணையம் தென்மராட்சி.
19.சந்தை வியாபாரிகள் சங்கம் சாவகச்சேரி.
20.சந்தை வியாபாரிகள் சங்கம் கொடிகாமம்.
21.நகர வரியிறுப்பாளர் ஒன்றியம் சாவகச்சேரி.
22.மீன் சந்தை வியாபாரிகள் ஒன்றியம் சாவகச்சேரி.
23.மின்னியலாளர் சமாசம் சாவகச்சேரி.
24.இளைஞர் கழகங்களின் சம்மேளனம் தென்மராட்சி.
25.விளையாட்டுக் கழகங்களின் சமாசம் தென்மராட்சி.
26.கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுறவுச் சங்கம் தென்மராட்சி.
27.தனியார் பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்.
தென்மராட்சிக் கிளை.
28.உணவக உரிமையாளர் சங்கம் சாவகச்சேரி.
29.முன்பள்ளி ஆசிரியர்கள் இணையம் தென்மராட்சி.
30.உள்ளூர் பழ,மர உற்பத்தியாளர் சங்கம் கொடிகாமம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்