வைத்தியசாலையின் அசமந்த போக்கு: சிகிச்சையின்றி நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள்!
வைத்தியசாலையின் அசமந்த போக்கு கண்டி மாவட்ட – நாவலப்பிட்டி வைத்தியசாலையில், நோயாளர்கள் நீண்ட நேரமாக பரிசோதிக்கப்படாது காத்திருந்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
வைத்தியர்கள் இருந்தும் நீண்ட நேரமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக நோயாளர்கள் காத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கதிரியக்க நிபுணர் வருகை தராமையே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது நிலை குறித்து உரிய தரப்பினரிடம் அறிவித்தும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், வைத்தியர்களும், வைத்திய சாலை நிர்வாகமும் இது தொடர்பில் அசமந்தமாக செயற்படுவதாகவும் நோயாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.