வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் பிடிக்கப்பட்டது!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை, பாட்டாளிபுரம் பகுதியில் நாகம்மாள் விவசாய சம்மேளனப் பிரிவில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் விவசாய சம்மேளனத்தினல் பிடிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

பாட்டாளிபுரம் -காயண்கேணி, வேலப் பெருமாள் வெளிகளில் உட்புகுந்து வேளாண்மைகளுக்கு சேதம் விளைவித்த மாடுகளே இவ்வாறு விவசாய சங்கத்தினால் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

மாடுகளால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாய உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பாதிப்புக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தரும் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகளை விட மாட்டோம் என பாட்டாளிபுரம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.