வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய உருவம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்