சீனா, தேசிய மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பை காரணமாகக் கொண்டு தனது குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிமுறைகள் இன்று, செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது தொழில்நுட்ப இறக்குமதி–ஏற்றுமதி விதிகளை மீறி, நாட்டின் தொழில்நுட்ப அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்படும் சில சீன குடிமக்களுக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை வெளிநாடு செல்லத் தடை விதிக்க முடியும்.
மேலும், அரசுத் துறை மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் முக்கியமான அல்லது ரகசிய தகவல்களை அணுகும் ஊழியர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் மீதும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ளன. புதிய விதிகள் அதிகாரிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டவர்களுக்கும் புதிய விதிகள் பொருந்துகின்றன. விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சீனாவுக்குள் நுழையத் தடை விதிக்க முடியும்.









