
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பி.என்.எஸ் என்ற வெளிநாட்டு தயாரிப்பான சிகரட்டுடன் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பி.என்.எஸ் என்ற வெளிநாட்டு தயாரிப்பிலான சிகரட்டுகளை வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர்.
பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது வர்த்தக நிலையத்தில் 320 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு பதுளை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரும் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரட்டுகளையும் கைது செய்த நபரையும் பதுளை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
