வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயம் : இருவரை காணவில்லை

அமெரிக்காவின் ஒகாயோவின் யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக, அமெரிக்க நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒகாயோ மத்திய சதுக்கத்திற்கு அருகில் வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆகையால் குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

காயமடைந்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆண் ஒருவரையும் பெண்ணையும் காணவில்லை எனவும், வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்