வெசாக் வலயத்துக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட நபர் பலி

வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரதன்மடுவ, கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கப்பட்டுள்ளது .

மின்சாரம் தாக்கிய நிலையில் இவரை கபித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .வெசாக் வலயத்துக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட நபர் பலி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்