வெங்காய சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்

பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் வழங்கியுள்ளது.

முன்னதாக, பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காகப் பல அளவுகோல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், பெரிய வெங்காயம் போன்ற விளை பொருள்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியதன் அவசியம் தொடர்பில் விவசாய அமைச்சர் லால் காந்த தெளிவுபடுத்தியுள்ளார்.

சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் வெங்காயக் கையிருப்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதன் தரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

இருப்பினும், வெங்காயத்தின் விட்டம் 35 மில்லிமீட்டர் முதல் 65 மில்லிமீட்டர் வரை இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் இந்த புதிய கொள்முதல் அளவுகோல்களை விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சித்துள்ளனர் .