-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகனான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் மோ.பாக்கியநாதன் (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்குறித்த இருவரும், நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றிருந்தனர்.
இதன்போது, இவ்வீதியால் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, தந்தை மகன் ஆகிய இருவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார், மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பேருந்தை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்