வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளால் மக்கள் அதிர்ச்சி
-பதுளை நிருபர்-
பதுளை ஹெஹெலல்ல வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்று கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகேமுல்லை ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் இந்த கைக்குண்டைக் கண்டு 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு கைக்குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்யும்படி புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைக்கு பயந்து இந்த கைக்குண்டை யாரோ அந்த இடத்திற்கு கொண்டு வந்து வைத்து இருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்