வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான ஜீப்: 9 பெண்கள் பலி

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது 25 அடி பள்ளத்தில் ஜீப் ரக வாகனம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.