கந்தானையில் வீடு ஒன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதை இரசாயன மூல பொருளின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் இந்த இரசாயனப் பொருள், அருகிலுள்ள காணி ஒன்றில் வீசப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளை அடுத்து, கந்தானையில் உள்ள குறித்த வீட்டில் 100 கிலோவிற்கு மேற்பட்ட இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், கடந்த வாரம் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்களை ஒத்தவை என அறிக்கையிடப்பட்டுள்ளது.