வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பொலனறுவையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிர் இழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிங்குராங்கொடை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததுடன் இதன்போது உயிரிழந்த பெண்ணின் கணவரும் குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
