வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

வெலிகம வள்ளிவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீள வீடு திரும்பிய போது சடலத்தை அவதானித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.