வீடொன்றிலிருந்து வீசிய துர்நாற்றம் : அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

களுத்துறை தெற்கு, இசுறு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, 02 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள், 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த 02 சடலங்களும் நேற்று புதன்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலங்களாக மீட்கப்பட்ட பெண்கள் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்